சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும்- பெளத்த பிக்குகள் விசேட பூஜை

sajith 2
sajith 2

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும்படி பெளத்த பிக்குகள் விசேட பூஜை ஒன்றினை நடத்தியுள்ளனர். கொழும்பு மாநகர சபை முன்றலில் பேரணியாக சென்ற பெளத்த பிக்குகள் அங்கு விசேட பூஜை ஒன்றை நடத்தினார்.

இலங்கையில் சியம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்கள் காணப்படுகின்றன. இம் மூன்று பீடங்களின் பெளத்த பீடம் குறித்த பூஜையினை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் பௌத்த பீடங்களினது இந்த ஆதரவு எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனைப் எதிர்வருகின்ற காலங்களில் காணக்கூடியதாக அமையும்.