நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மின் விநியோகம் துண்டிப்பு

1 electric
1 electric

இலங்கை மின்சார சபை இன்று முதல் நாடு முழுவதும் தினமும் இரண்டு மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாறி மாறி இரண்டு மணி நேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் விநியோகிக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையங்களே தேவைப்படும் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது.

இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் வரை கீழ் காணப்படும் நேரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது.

A- 8.30 – 10.30

B – 10.45 -12.45

C -12.45- 2.45

D – 2.45 – 4.45

ஆகிய நேரங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. மின் விநியோக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், கடந்த சில வருடங்கள் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.