ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் – மில்லியன் டொலர்கள் லஞ்சம்!

7 bs
7 bs

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு பல மில்லியன் டொலர்கள் லஞ்சம் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையை இலங்கையின் நிபுணர் குழு நிறுவனமான எட்வோ கேட்டா வரவேற்றுள்ளது.

அதேநேரம் இலங்கையின் அரச நிறுவனங்களில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அந்த நிறுவனம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் காரணமாக திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டில் மாத்திரம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு 17.2பில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் 169 பில்லியன் ரூபாய்கள் நட்டம் காண்பிக்கப்பட்டுள்ளதாக ‘எட்வோகேட்டா’ இன்று அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

காலத்துக்கு ஏற்ப உரிய செயன்முறைகள் கடைப்பிடிக்கப்படாமையே இந்த நட்டங்களுக்கான காரணமாகும்.

அத்துடன் முறையான முகாமைத்துவம் இல்லாமை, நியமன முறைகளில் முறைகேடுகள் என்பனவும் இந்தநட்டங்களுக்கு காரணங்களாகும் என்று எட்வோகேட்டா தெரிவித்துள்ளது.