69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் இன்று தவிடுபொடி!

1 kedi
1 kedi

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுடைய எதிர்பார்ப்புக்களும் இன்று தவிடுபொடியாகிவிட்டதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.

ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையைக்கூட புதிய அரசாங்கம் பறித்திருப்பதாக சாடிய ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவரான கே.டி.லால்காந்த, அவசியமாக இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மக்கள் செய்யலாம் என்றும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட பலவிதமான ஆர்ப்பாட்டங்களை செய்வதற்காக கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒருபகுதியை ஒதுக்கியுள்ளார்.

கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அம்பியூலன்ஸ் வண்டி, தொழிலுக்கு செல்வோர் மற்றும் திரும்புவோர் உட்பட மக்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய இந்த முடிவை எடுத்திருப்பதாக

அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருக்கின்றார்.

எனினும் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நிராகரித்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினமும் காலி வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டியில் வைத்து தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவரான கே.டி.லால்காந்த, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையையும் கோட்டாபய அரசு பறிப்பதாக தெரிவித்தார்.