இந்திய உதவியால்த்தான் புலிகளை தோற்கடித்தோம் – மகிந்த

1 ma int
1 ma int

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலை புலிகள் இயக்கத்தை அழிக்க இந்தியா பெரும் உதவிகளை வழங்கி உள்ளது.

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை இந்தியாவின் உதவியின்றி எம்மால் நிறைவு செய்திருக்க முடியாது. ஆனால் அந்த நாட்களில் இந்தியா தாம் வழங்கிய உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க விரும்பவில்லை.

மேலும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சீனாவோ இந்தியாவோ தலையிட்டதில்லை. யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் நாங்களே அபிவிருத்திகளை செய்தோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அதிகபடியான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் அதுவும் அபிவிருத்திகளை விரும்பவில்லை.மாறாக அதிகாரப்பகிர்வை கோரி தமிழர்களுக்கான தனி மாநிலத்தை கட்டியெழுப்பவே முயல்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.