கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆலோசனை

01
01

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றையூம் தொடர்புபடுத்தி கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சீர்தூக்கி பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இ து பற்றி குறிப்பிட்ட , சமூகத்தில் வன்முறையோடு கூடிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி சிறப்பாக பங்களிப்புச் செய்வது பற்றிய தமது முன்னெடுப்புக்கு ஏற்கனவே உறுப்பினர்களிடமிருந்து போதிய ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளார் .

இதற்குச் சற்று முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து உரையாடியிருந்தனர்.

அவர்களுடனும் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை அவர் பரிமாறினார். தற்போது இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரும், இங்குள்ள அதன் பிரதிநிதிகளும், அதில் பங்குபற்றினர்.