கூகுள் நிறுவனம் நடாத்திய போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் முதல் நிலை

0 bb
0 bb

சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 566 மாணவர்கள் பங்கேற்றனர். 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 பணிகள் வழங்கப்பட்டன.

இதில் Apertium என்ற மென்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடத்தைப் பெற்று பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.