டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

7 d 1
7 d 1

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக பொல்வேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.