உடையார்கட்டு பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியிலான சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு !

IMG 3249
IMG 3249

முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப்பகுதியில் பாரிய மரக்கடத்தல் ஒன்று முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது .

இந்த மரக்கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றிருந்தவேளை  வன திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு  உளவியந்திரம் ஒன்றில் கடத்தப்பட்ட பெறுமதியான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்ட  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மூவர் தப்பியோடியுள்ளனர்.

இதில்  ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரத்துண்டுகள் ,பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம்   என்பன கைப்பற்றப்பட்டுள்ளன . மிக நீண்டநாட்களாக வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த  சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்சியாக முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று  வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது .

குறைவான ஆளணி வளங்களுடன் இயங்கிவரும் முல்லைத்தீவு வட்டார வன அலுவலகம் பாரிய நிலப்பரப்பை  காடாக கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்  இடம்பெறும் மரக்கடத்தல்களை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .