சுமந்திரனுக்கு தக்க பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக்கொண்டிருக்கிறார்கள் போராளி குடும்பத்தினர்!

625.200.560.350.160.300.053.800.300.160.90 1
625.200.560.350.160.300.053.800.300.160.90 1

போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமைக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கருத்தறியும் கலந்துரையாடல் 29 ஆம் திகதி இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையை மேற்கொண்டு தான் தனி இயக்கமாக வளர்ந்து வந்தார்கள் என்று ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சி.வி. விக்னேஸ்வரன், அரச பயங்கரவாதமே சாதுவான இளைஞர் யுவதிகளை ஆயுதமேந்த வைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று கூறி சுமந்திரன் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்திவிட்டதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.