செம்மலை நீராவியடிப் பிள்ளையார் விவகாரம்- நாளை பாரிய கண்டனப் போராட்டம்!

Protesters
Protesters

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக புகுந்து விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை காலமானார்.

இந்நிலையில் மறைந்த தேரரின் உடலை விகாரைக்கு முன்னதாக உள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளத்தில் எரியூட்டப்பட்டிருந்தது,

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (24.09.2019) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

சட்டதரணிகள், தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில் உணர்வுள்ள அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.