அருந்தவபாலனுக்கு எதிராக சக்கரவியூகம் அமைக்கும் தமிழரசுக் கட்சி!

arunthavapalan
arunthavapalan

தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்புச் செயலாளர் கந்தையா அருந்தவபாலனைத் தோற்கடிப்பதற்காக தமிழரசுக் கட்சி வியூகங்களை அமைத்துவருகிறது.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் உள்ளுக்குள் வைத்தே நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்ட அருந்தவபாலன் அவர்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் களமிறங்குகிறார். அருந்தவபாலன் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் ஜனவசியமும் அருந்தவபாலன் அவர்கள் நூறு வீதம் வெல்வார் என்பதே களநிலைமையாக உள்ளது.

இந்த களநிலமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தென்மராட்சியில், கொழும்புவாசியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா மற்றும் கைதடியைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் தபேந்திரன் ஆகியோர்களை களமிறக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இரு பக்கத் தாக்குதலால் அருந்தவபாலனை வீழ்த்தலாம் என்பது தமிழரசுக் கட்சியின் கணக்காக உள்ளது.

ஆனால் உள்ளூர் களநிலவரங்கள் தமிழரசுக் கட்சியின் திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அருந்தவபாலன் வெற்றிபெறுவார் என்கின்றன. ‘கணவருக்காக மனைவிக்கு வாக்குப் போடும் தமிழ்நாட்டு கலாச்சாரம் இலங்கையிலும் வேலைசெய்யும் என்று கனவு காணும் தமிழரசுக் கட்சியின் கனவில் நிச்சயம் மண்தான்’ என்கிறார் உள்ளூர்வாசி ஒருவர்.