உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வீதிகள் புனரமைப்பு

P.S.M.Charles 1
P.S.M.Charles 1

வடக்கு மாகாணத்தில் உள்ள வீதிகள் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில், அதனை சிலர் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பெரும்பாலான வீதிகள் புனரமைக்கப்படாது காணப்படுகின்றமை குறித்து கிடைத்த தகவலுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநரால் அது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விதிகளை புனரமைப்பு செய்வதற்கு நிதி ஏற்பாடுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு திட்ட வரைபு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த வீதி புனரமைப்பு தொடர்பாக அரசியல் நோக்கத்திற்காக சிலரால் மக்களிடம் தவறான கருத்துகள் முன்வைக்கப்படுவதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.