அரசின் வாகனத்தை கையளித்தார் – செல்வம் எம். பி

20
20

கோட்டபாய ராஜபக்ச ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் அண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புக்களையும் அரச உடமைகளையும் அரசிடம் கையளித்து வருகின்றனர் .

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கடந்த நாடாளுமன்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற பிரதிக்குழுத்தலைவராக பதவி வகித்திருந்தார்.

இதன் போது அவரது பாவனைக்கென வழங்கப்பட்டிருந்த நாடாளுமன்ற வாகனத்தை நாடாளுமன்றம் கலைப்பட்ட நிலையில் இன்றைய (06) தினம் மீள ஒப்படைத்துள்ளார்.