சாதியை பார்த்து வேட்பாளரை தெரிவு செய்யும் தமிழரசு கட்சி

1 sdw
1 sdw

இம்முறை வழமையான தேர்தல்களை போல் அல்லாது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பெரும் இழுபறி நிலை தமிழரசு கட்சிக்குள் இடம்பெறுகிறது .

முக்கியமாக யாழ்மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளரை தெரிவுசெய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது .

கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினர்கள் சாதியை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர் .


கட்சியில் கனகசபாபதி அந்த சமூகம், இந்த சமூகம் என உறுப்பினர்களை விழித்து பேசுவதாகவும் .


உயர்சாதியினரையே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என அவர் கட்டுப்பாடு போட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளே இருந்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது .

மாவை சேனாதிராஜா மற்றும் கனகசபாபதி ஆகியோர் கடும் சாதி பாகுபாடு காட்டி உறுப்பினர்களை ஓரம்கட்டி விட்டு தங்கள் உறவினராக இருப்பவர்களை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளனர் .


இதனால் கட்சிக்குள் அரசல் புரசலாக பிரிவினை தோன்றியுள்ளது .

திறமையான பெண் வேட்ப்பாளர்கள் கட்சிக்குள் இருந்த போதும்சாதியை காரணம் காட்டி பெண்களை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது .