கொரோனா தகவல்களை வழங்க புதிய மையம்

d 1
d 1

கொரோனா வைரஸ் தொடர்பாக தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பாக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பாக கவனம் செலுத்துங்கள்.

உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையில் இரண்டு கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதினால் அது தொடர்பாக அரசாங்கம் கூடுதல் அவதானத்துடன் செயல்படுகின்றது.

இதே போன்று இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தரப்பினர் இணையதளம் சமூக வலைப்பின்னல் மற்றும் whatsapp, viber group ஊடாக பொது மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வகையில் உறுதி செய்யப்படாத தகவல்களை முன்னெடுப்பதை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

தேசிய ஆபத்தான நிலை நிலவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதை அரசாங்கம் கடுமையாக கண்டிப்பதுடன் இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கோருவதுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பாக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் அரசாங்கம் தெரிவித்துக் கொள்கின்றது.

இதேபோன்று பொதுமக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொள்வது என்னவெனில் உத்தியோகப்பூர்வ மற்றும் உறுதிசெய்யப்பட்ட செய்திகளை மாத்திரம் ஏற்றுக் கொண்டு அதற்கு அமைவாக செயல்பட வேண்டும் என்பதாகும்.

பொதுமக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய உத்தியோகப்பூர்வ தகவல்களை தவறாது சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம், சுகாதார சேவை மேம்பாட்டு பணியகம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வ அறிக்கையினூடாக அனைத்து ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்தும் அரசாங்கம் அனைத்து ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில் மேலேகுறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மூலம் உறுதிசெய்யப்பட்ட உத்தியோகப்பூர்வ தகவல்களை மாத்திரம் வெளியிடுவதற்கு அல்லது பிரச்சாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

இதேபோன்று, சில இடங்களில் கொரோனா தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் இருப்பதாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களில் ஏமாந்து விடக்கூடாது.

இவ்வாறான நோயாளர் ஒருவர் ஏதாவது ஒரு இடத்தில் சில சந்தர்ப்பத்தில் உறுதி செய்யப்பட்டால் அதுதொடர்பாக உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் நிறுவனத்தினால் உத்தியோகப்பூர்வமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

இதேபோன்று உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களினால் பொதுமக்களை தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும் ஊடகத்திற்காக உறுதி செய்யப்பட்ட தகவலை வழங்குவதற்கு சுகாதார திணைக்களம், சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து COVID – 19 ஊடக மத்திய நிலையமொன்றை அமைத்தள்ளதுடன் கொரோனா நிலைமை தொடர்பாக ஏதேனும் தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு 24 மணித்தியாலமும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.

1. 071 010 7107

2. 011 307 1073

இதேபோன்று உறுதிசெய்யப்பட்ட உத்தியோகப்பூர்வ தகவல்கள் கீழ்கண்ட இணையதளம், Facebook பக்கங்களில் அடிக்கடி வெளியிடப்படுவதுடன் இந்த தகவல்கள் தொடர்பாக அடிக்கடி கவனம் செலுத்துமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Health promotion Bureau (Facebook page)

Department of government Information (YouTube) (Facebook page)

news.lk (website) (Facebook page)