மைத்திரிக்கு சந்திரிகா காரசாரமான கடிதம்

4 d 1
4 d 1

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அழித்துவிட முடியும் என்று கருதிவிடக் கூடாது. தாய்நாட்டில் இன்றும் காணப்படுகின்ற நீதி, நேர்மை, மோசடிகளுக்கு எதிரான மக்களின் கனவுகளை நனவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு சு.கவை மீளமைக்க சிறந்த தலைமைத்துவம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

‘பூந்தோட்டத்திலுள்ள அனைத்து ரோஜாக்களையும் அழிக்க முடிந்தாலும் கூட மீண்டும் தளிர் விடுகின்ற வசந்த காலத்தைத் தடுக்க இயலாது’ என்று ரஷ்யாவின் சிரேஷ்ட எழுத்தாளர்களுள் ஒருவர் கூறியுள்ளதை நான் மிகவும் ஆழமாக நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள 13 பக்கங்களைக் கொண்ட கடிதத்திலேயே சந்திரிகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிதைவு, அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து  நீக்கியமை, 2015 தேசிய அரசு, சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கான சதித்திட்டங்கள், 2019 ஜனாதிபதித் தேர்தல் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க காரசாரமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.