மஹிந்த தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை – ரத்ன தேரர் போர்க்கொடி

1 ghg
1 ghg

நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்பார்த்த எந்த விடயமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

பல பதவிகளை வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-  

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல், மத்திய வங்கி  பிணைமுறி  மோசடி உள்ளிட்ட பல விவகாரங்கள்  தொடர்பில்  நடவடிக்கை  எடுப்பதற்காகவும்,  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்கள் ஆதரித்திருந்தனர். ஆனால், இன்று, மக்கள் எதிர்பார்த்த எதையாவது இந்த அரசு நிறைவேற்றியுள்ளதா?

கடந்த அரசில்  இடம்பெற்ற மோசடிகள்  தொடர்பில்  பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்த அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச பெயரளவிலேயே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவருக்கு   அதிகாரங்கள் இல்லாத  நிலைமையே காணப்படுகின்றது. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியை ஜனாதிபதி கோட்டாயவிடம் வழங்க வேண்டும் பிரதமர் மஹிந்த.” – என்றார்.