மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு இழுத்து மூடல்

2
2

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

இது தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் சரத் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சி சாலை, ரிதியகம சபாரி பூங்கா என்பன நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனக் கலாசார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரினால் உறுதிமொழி வழங்கப்படும் வரை இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.