கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கான மருந்துகள் பரிந்துரை !

1 Coronavirus
1 Coronavirus

கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

பேராசியர் காமினி மெண்டிஷினால் தயாரிக்கப்பட்ட இந்தக்கொள்கை அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை செயலணிக் கூட்டத்தின்போது சமர்ப்பித்துள்ளது.

இந்த கொள்கை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கக்கூடிய Hydroxychloroquine மற்றும் Azithromycin இரண்டு மருந்துகள் தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்துகள் பல வருடங்களாக மலேரியா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏனைய வைரஸூக்கு எதிரான மருந்துகளை காட்டிலும் இவை கொரோனா வைரஸூக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மருந்துகளாக கருதப்படுகின்றன.

இந்த மருந்துகள் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு முன்னேற்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது பிரான்ஸிலும் இது பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் அறியப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்றும் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த மருந்துகள் தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் எச்சரிக்கைகளையும் குறித்த கொள்கை அறிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.