ஆசிரியர்கள், அதிபர்களின் சுகவீன விடுமுறை போராட்டம்

schoolclosed
schoolclosed

இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் மகேந்திர ஜெயசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த போராட்டத்திற்கு 31 ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். 1997இல் தொடங்கிய ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடானது தொடர்ந்த வண்ணமேயுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்விக்கு தேவையான நிதியை ஓதுக்காது பாடசாலையை கொண்டு நடத்தும் செலவு பெற்றோர் மீது திணிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி 1 இற்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனார்.

சகல பாடசாலை அதிபர்களும் நேற்று மாணவர்களிடத்தில் இன்று ஆசிரியர்களின் சுகவீன விடுமுறைப் போராட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதால் பாடசாலைகள் யாவும் இயங்கமாட்டாது, எனவே மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டிய தேவை கிடையாது, வகுப்புக்கள் அனைத்தும் நடைபெறா எனத் தெரிவித்துள்ளனர்.