கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு மூடப்பட்டது

1585111671849 IMG 0062
1585111671849 IMG 0062

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடபட்டுள்ளது.

அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் லத்தீப்  தெரிவித்தார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில்  அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யுமாறும் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகமும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.