இலங்கை முழுவதும் தேங்கிக் கிடக்கும் கோழி முட்டைகள்!

images 1 2
images 1 2

இலங்கையில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கோழி முட்டை விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளாந்தம் உற்பத்தியாகும் முட்டைகளில் நூற்றுக்கு 10 வீதம் மாத்திரமே விற்பனையாகுவதாக திணைக்களத்தின் இயக்குனர் சுனில் சில்வா கூறியுள்ளார்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட முட்டைகளில் 11 மில்லியன் கோழி முட்டைகள் வட மேல் மாகாண உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.