மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

bth
bth

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நோயாளர்களின் பாதுகாப்புக்காக பின்வரும் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்குமாறு புற்றுநோய் வைத்திய நிபுணர்களால் வேண்டப்படுகின்றீர்கள்.

1.இக்காலப்பகுதியில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற வழங்கப்பட்ட வைத்திய அலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்.

2.புதிதாக அடையாளம் காணப்பட்ட, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரம் தாமதித்து வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

3.இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கிளினிக் பராமரிப்பில் உள்ளவர்கள் தங்களுக்க வழங்கப்பட்ட திகதியிலிருந்து 2 அல்லது 3 வாரம் தாமதித்து வருகை தரவும்.

4.தற்பொழுது கீமோதெரப்பி இன்ஜக்சன் தொடர்ச்சியாக பெறுபவர்கள் வழங்கப்பட்ட திகதிக்கு தவறாமல் சமூகமளிக்கவும். துரதிஷ்டவசமாக தங்களுக்கான மருந்து வகைகள் பற்றாக்குறை நிலவுமானால் புதிய திகதிகள் வழங்கப்படும்.

5.இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிய திகதிகள் அல்லது நாட்களில் தவறாமல் சமூகமளிக்கவும்.

6.தைரொய்ட் புற்றுநோய், மார்புப் புற்றுநோய் மற்றும் ஏனைய சில புற்று நோய்களுக்காக மாத்திரைகள் பெறுபவர்கள் தங்களால் வரமுடியாதவிடத்து உரிய கிளினிக் கொப்பிகளை அனுப்பி வேறு நபர்கள் மூலமாக தங்களுக்குரிய மாத்திரைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

7.கீமோதெரப்பி இன்ஜக்சன்ன், கீமோதெரப்பி மாத்திரைகள் தொடர்ச்சியாக பெற்றுக்கொளடபவர்கள் காய்ச்சல், இரத்தக்கசிவு மற்றும் இரத்தப் பரிசோதனை ரிப்போட்களில் மாற்றங்கள் காணப்படுமாயின் அண்மையில் உள்ள வைத்தியசாலைக்கோ அல்லது வைத்தியரை தொடர்புகொள்ளவும்.

8.சிறு பிள்ளைகள் தவிர்ந்த ஏனைய நோயாளர்கள் வேறு நபர்களை அழைத்து வருவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளவும். ஏனெனில் பொதுவாக புற்றுநோயாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆதலால் இலகுவாக நோய் தொற்றுக்கு ஆளாகலாம்.

9.மட்டக்களப்பு சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய புற்றநோய் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெறுபவர்களில் இரத்தப் புற்றுநோய் தவிர்ந்த ஏனையவர்கள் அவசர நிலைமைகள் ஏற்படுமிடத்து தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொலைபேசி இலக்கம் : 065 – 2224461 – (119, 120, 570)

10.கிளினிக் நாட்கள், ஸ்கேன் திகதிகள் பிந்தியவர்களும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் (இரண்டு வாரங்களின் பிற்பாடு)

தற்போது கூறிய நடைமுறைகளானது தங்களது பாதுகாப்புக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றபடியால் உங்களது ஒத்துழைப்பு மிகவும் அத்தியாவசியமானது அத்தோடு இதன்மூலம் ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகிறோம்.எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.