ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விளமக்கமறியல்!

Ranjan
Ranjan

காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்தால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளமக்கமறியலில் வைக்குமாறு நுகோகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் நேற்றைய தினம் மிரிஹானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, ஊரடங்கு உத்தரவினை மீறிய ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டமை, ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சிகிச்சையாளர் ஒருவர் மாதிவெலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு தொகுதிக்குள் கெப் ரக வாகனம் ஒன்றில் பிரவேசித்துள்ளார்.

குறித்த நபரிடம் காவல் துறையினர் ஊரடங்கு அனுமதி பத்திரத்தினை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அறிவித்துள்ளார்.

சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரஞ்சன் ராமநாயக்க காவல் துறையினரை நிந்தித்து அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மிரிஹான காவல் துறையினர் நேற்றிரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்துள்ளனர்.