பொபி மலர் தினம்; முதலாவது மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு

1 16
1 16

பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கு அணிவித்தல் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நினைவு தினம், பொபி வேலைத்திட்டம் மற்றும் போர் நினைவுத் தூபி அபிவிருத்தி குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் கலாநிதி ஷேமால் பெர்ணான்டோ உள்ளிட்ட இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.