தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக்க நடவடிக்கை!

railways declared an Essential Service B
railways declared an Essential Service B

தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனை அச்சிடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டார்.

இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.