பொது வேட்பாளராக தமிழர்; பரிசீலிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

wikneshwaran
wikneshwaran

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பொதுவான தீர்மானத்தை வெளிப் படுத்தும் நோக்கில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை முன்னிறுத்தும் யோசனையைப் பரிசீலிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் சமயத் தலைவர்கள், கற்றறிந்தவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக் குழு தமிழ் அரசியல் கட்சிகளைச் சந்திக்கும் பணியை நேற்று தினம் முன் ஆரம்பித்தது.

இந்தச் சுயாதீன குழுவில் யாழ்ப்பாணம் சின்மயா மிசன் சுவாமி சிதாகாசானந்தா, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிமேதகு பொன்னையா ஜோசப் ஆண்டகை, தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத் தியர் அடிகளார், யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார், சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம், யாழ். பல்கலைக்கழகம் அரசறிவி யற்றுறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கு.குருபரன், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர் சிவபாலன், யாழ். பல்கலைக்கழகம் சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி. கோசலை மதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மட்டக்களப்பு சமூகச் செயற்பாட்டாளர் குருநாதன்,
திருகோணமலை சமூகச் செயற் பாட்டாளர் கஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர் தலில் தமிழ் மக்களின் பொது வான தீர்மானத்தை வெளிப்படுத் தும் நோக்கில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழு வின் அங்கத்தவர்கள் நேற்று முன் தினம் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்தது.

இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் யோசனை தொடர்பில் சிந்திப்ப தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சந்திப்பும் இடம்பெற்றது.

இச்சந் திப்பில் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்புக்கள் இரண்டும் சுமுகமாக இடம் பெற்றன என்று தமிழ் மக்கள் பேரவை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றுத் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது.

பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் தனக்கு நம்பிக்கை யில்லை என்று சுட்டிக்காட்டிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அவ்வாறு பொது வேட்பாளரை முன்னிறுத்துவதானாலும் காலம் போதாது என்று சுட்டிக்காட்டினார். பொது வேட்பாளரை முன்னிறுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய வற்றின் நிலைப்பாடு தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு குழுவினரால் எடுத்துக் கூறப்பட்டது.

இந்த யோசனை தொடர்பில் தான் பரிசீலிப்பதாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனை மட்டுமே சந்திப்போம் என்று தமிழ் மக்கள் பேரவையின் குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நால்வரை குழு சந்தித்தி ருந்தமை குறித்து கூட்டமைப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவுடன் தனியாகச் சந்திப்பதற்காக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதனுக்கு தொலைபேசியில் தொடர்பை இந்தக் குழு ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டார் என்று தெரிவிக் கப்பட்டது. அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு நேற்றிரவு சந்தித்தது.