இலங்கையில் கொரோன 706 ஆக உயர்ந்தது

4 rrr
4 rrr

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11.50 மணியளவில் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702 இலிருந்து 705 ஆக அதிகரித்திருந்தது. இந்தநிலையில் இன்று மாலை ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 706 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் 03 பேர் வெலிசறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையினராவர்.

மற்றைய இருவரும் கடற்படையினரின் நெருங்கிய உறவினர்கள் எனவும், அவர்கள் மிஹிந்தலை மெத்சிறி செவண தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 706 பேரில் தற்போது 517 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 176 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.