குமாரவெல்கமவின் முடிவு – டிலான் விமர்சனம்

dilan
dilan

குமார வெல்கம ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிடத் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான முடிவு என நாடாளு மன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள ராக கோத்தபாய ராஜபக்சவை நியமிக்கவேண்டாம் என்று இவர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச உத்தியோகப்பூர் வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஜனாதிபதியு டன் இணக்கமாகச் செயற்பட தொடங்கினார்.

இவருக்கும், முன் னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் எவ்வித அரசியல் ரீதி யிலான முரண்பாடுகளும் கிடை யாது.

தனிப்பட்ட பகைமையே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன மாகப் போட்டியிட்டால் அவர் பாரிய பின்னடைவை எதிர்க் கொள்ள வேண்டும். இன்றும் காலம் கடக்கவில்லை.

மீண்டும் பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்த்தி பலமான அரசைத் தோற்றுவிக்க எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படாது – என்றார்.