ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலும், தேர்தல் நடவடிக்கைகளும்

ELection Dep
ELection Dep

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சகல வேட்பாளர்களுடனும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தையில் வேட்புமனுத் தாக்கல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது,

வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாளை காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து அறிவிப்பதுடன் இந்த நிகழ்வு அனைத்தும் தொலைக்காட்சி அலைவரிவைகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

போட்டியிடும் வேட்பாளாகள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை மூன்று மாதங்களுக்குள் பிகடனப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்டும் வேட்பாளர் பதவி ஏற்பதற்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் திங்கட்களன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை ராஜகிரிய சரண மாவத்தை மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல் வரலாற்றில் முதல்துறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஆளில்லா விமான drone செயற்பாடுகளை விமானப்படை கண்காணிக்கும்.

அன்றைய தினம் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலபபடுத்தப்படவுள்ளது.பொலிஸ் விசேட அதிரடைப்படை அடங்களாக 1700 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21மில்லியன். இவர்களுள்ள 15.6 மில்லியன் வாக்காளர்கள் இந்தத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.