முடிவின்றித் தொடரும் சுதந்திரக்கட்சியின் குழப்பம்!

SLFP
SLFP

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் இறுதி தீர்மானம் நேற்று அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்த நிலையில் தொடர்ந்தும் அந்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது சின்னம் உள்ளிட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டன.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டிணைந்தவர்களே தேர்தலில் வெற்றிக்கண்டுள்ளனர் என வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் எனவும அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மகிந்த அமரவீரவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்றும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.