7500 பேரை கண்காணிப்புப் பணிக்கு அமர்த்துகிறது கஃபே!

caffe
caffe

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் வரலாற்றில் முதற்தடவையாக 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் 16ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கலை அடுத்து வன்முறைகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் கெபே அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் தமது கட்சி சார்ந்த வேட்பாளர்களை உரிய வகையில் கையாள கட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இந்த முறை தேர்தலில் போட்டியிடாமை விசேட அம்சம் எனவும், அரச சொத்துக்களை தேவையற்ற விதத்தில் பயன்படுத்துதல் இந்த முறை தேர்தலில் அதிகம் இடம்பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழக்குகின்றமை உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் குறித்து இந்த முறை விசேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.