வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டு

ballot papers
ballot papers

ஜனாதிபதித் தேர்தலுக்காக இம்முறை தயாரிக்கப்படவுள்ள வாக்குச் சீட்டானது வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்கு 0112 868 212 அல்லது 0112 868 214 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.