இலங்கை வீரர்களுக்கு விசேட பயிற்சி- நிபுணர்களை அழைக்க ஏற்பாடு

j.wood akram
j.wood akram

இலங்கை வீரர்களுக்கு விசேட பயிற்சியளிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வஸீம் அக்ரம் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜூலியன் வூட் (Julian Wood)ஆகியோரது சேவையினை பெற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இலங்கை தேசிய பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கவும் தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் அவர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

50 வயது மதிக்கத்தக்க ஜூலியன் வூட் இங்கிலாந்து பிராந்திய வீரராக இருப்பதோடு, விசேடமாக ஆறு ஓட்டங்களை எவ்வாறு பெறுவது தொடர்பில் விசேட ஆராய்ச்சிகளை மேற்கொண்டவரும், அது தொடர்பில் அவர் அகடமி ஒன்றினை நடாத்தி வருபவருமாவார்.

எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலை வெற்றியடையச் செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட அவதானத்தினை செலுத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.