ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

unp meeting
unp meeting

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், கொழும்பு காலி முகத்திடலில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

மக்கள் தேசிய சக்தியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்றுமுன்தினமும் (Oct.08) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (Oct.09) அனுராதபுரத்திலும்ஆரம்பிக்கப்பட்டிருந்தன..

காலி முகத்திடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன(கடந்த மே தினத்தன்று இடம்பெற்ற கூட்டம்), மக்கள் தேசிய சக்தியின் கூட்டத்தின் போது (வேட்பாளரை அறிவிப்பதற்காக) எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை களமிறக்கியது. இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி பெருந்திரளான மக்கள் கூட்டத்தை காண்பிக்க வேண்டிய இது ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், பங்கேற்பர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.