உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள உரிய பொறிமுறை இருக்கவில்லை

fh
fh

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர்கூட புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள உரிய பொறிமுறை இருக்கவில்லை என்று கோட்டை காவல்துறையின் புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னால் ஆர் டபில்யூ திலகவர்த்தன என்ற இந்த அதிகாரி நேற்று சாட்சியமளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல்களுக்கு முன்னரேர அல்லது பின்னரோ ஆழமான புலனாய்வு பணிப்புரைகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் தொடர்பில் எங்கிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் இதன்போது சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான பிரதிநிதி, தமது தொடர்புகள் பெரும்பாலும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் தொழிற்சங்க செயற்பாடுகள் வருவதற்கான முக்கிய பிரதேசமாக கொழும்பு கோட்டையை கூறமுடியும் என்றும் கோட்டை காவல்துறையின் புலனாய்வு பொறுப்பாளர் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.