போக்குவரத்து அமைச்சரின் அதிரடி முடிவு!

unnamed 11
unnamed 11

நாட்டின் தற்போதைய நிலையில், பேருந்து கட்டணத்தில் ஒருபோதும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

நிவாரணம் அவசியமாயின் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன், போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக முறையான வருமானம் கிடைக்காமையும், இரண்டு வருடங்களில் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாதமை காரணமாக, பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அமைச்சரிடம் இதன் போது கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தனியார் பேருந்து துறைக்கு அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை தற்போது வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன் போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து துறைகளும், வருமானத்தை இழக்கும் நிலையை எதிர்நோக்கியுள்ளமையினால், தற்போதைய நிலை அதற்கு உகந்ததல்ல என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.