தேசிய மக்கள் சக்தி முன்னணியின் கல்விக் கொள்கை வெளியீடு

Anura Kumara Dissanayake 1
Anura Kumara Dissanayake 1

மாணவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தக்கூடிய கல்வி முறைமையொன்று நாட்டிற்கு அவசியமாகும் என  தேசிய மக்கள் சக்தி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கையை வெளியிடும் நிகழ்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவிப்பவர்களின் நூற்றுக்கு 78 வீதமானோர் சாதாரண தர பரீட்சை சித்தியடையாதவர்கள் எனவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் நூற்றுக்கு 60 வீதமானோர் சாதாரண தர பரீட்சை சித்தியடையாதவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மாணவர்களுக்காக கல்வி செலவை பெற்றோர்கள் மீது சுமத்தாது அரசாங்கம் பொறுப்பொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதே எமது கொள்கையின் முக்கிய அம்சமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.