தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்

7 d
7 d

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்களிடம் அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாவிடின், தற்காலிக அடையாள அட்டைகளை மாவட்ட  தேர்தல்கள் செயலகத்தினூடாக பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஒரு வாக்காளர், தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில், எதனையாவது கொண்டிராவிடின் அவர், இந்த தற்காலிக அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை மாவட்ட தோதல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த தற்காலிக அடையாள அட்டை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.