நாட்டில் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள கடைகளை மூடுவதற்கு வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளாக மாகாண சுகாதார சேவைகள் இயக்குனர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியிலுள்ள குருவிட்ட, எகலியகொடை, மற்றும் இரத்தினபுரியில் கொரோனா தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய 4 பேர் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பிலிருந்த 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த பகுதியிலுள்ள கடைகளை மூடுவதற்கு வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளாக மாகாண சுகாதார சேவைகள் இயக்குனர் கபில கன்னங்கர தெரிவித்தார்.