தேசிய ரீதியில் சாதனைப்படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

batticaloa
batticaloa

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது .

35 வருடங்களிற்குபிறகு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களினால் தேசிய ரீதியில் சாதனை படைத்ததையிட்டு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் கே.பாஸ்கர் தலைமையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது .

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக சாதனை படைத்த மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களினால் ஊர்வலமாக கல்லூரி பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர் . இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயக் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே .ரவீந்திரன், கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் எந்திரி டி .கோபிநாத், கல்லூரி பழைய மாணவ சங்க உபதலைவர் வைத்தியர் டி . துஷாந்தன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கல்வி அமைச்சு நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அணியினர் வெற்றியீட்டி, தேசிய மட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அதேநேரம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள்
2ம் இடத்தினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள்