கொரோனா தொடர்பில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு 2 வருட கால சிறைத்தண்டனை!

ரோஹண 1
ரோஹண 1

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு 2 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படு என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் 3 விசேட பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளது. 26 அதிகாரிகள் உள்ளடங்கிய இக்குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது தண்டனைக் கோவைச்சட்டத்தின் 120ஆம் பிரிவிற்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றவாளிக்கு 2 வருட கால சிறைத் தண்டனை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.