ரஷ்யா 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கவுள்ளது!

unnamed 32
unnamed 32

கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்ததால் 20 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது ரஷ்யா. 38 மனிதர்களுக்கு முதற்கட்ட மனித பரிசோதனையை மேற்கொண்ட ரஷ்யா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதை கண்டறிந்துள்ளது. இதனை ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பானது என தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களிடையே 3-ம் கட்ட பரிசோதனையை ஓகஸ்ட் மாதம் மிகப்பெரிய அளவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, சோதனை அடிப்படையில் 3 கோடி தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் பயன்படுத்தப்படும். அதன்பின் வெளிநாடுகளுக்கு 17 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நேரடி நிதி முதலீட்டு தலைவர் கிரில் டிமிட்ரோவ் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதற்கட்ட பரிசோதனை முடிவுக்குப் பிறகு ஓகஸ்ட் மாதம் இந்த மருந்தை உள்நாட்டில் பயன்படுத்த ரஷ்யா அனுமதி வழங்கும் என்றும் நம்புகிறோம். மற்ற சில நாடுகளுக்கு செப்ரெம்பர் மாதம் வழங்கப்படலாம். இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது.

2-ம் கட்ட பரிசோதனை ஓகஸ்ட் 3-ம் திகதி முடிவடைகிறது. அதன்பின் 3-ம் கட்ட பரிசோதனை உள்நாட்டிலும், இரண்டு மத்திய கிழக்கு நாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன.ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்கிறோம்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.