நீராவியடி விஹாரையில் சி.சி.ரி.வி கமரா பொருத்த தடை

neeraviyadi
neeraviyadi

முல்லைத்தீவு நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கமராக்களை பொருத்தியிருந்த நிலையில் இவ்வாறு கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சி.சி.டி.வி கமராக்களை பொருத்த வெலி ஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஹாராதிபதி பணியின் நிமித்தம் வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் வரும் வரை விகாரையின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சி.சி.ரி.வி கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த போது பொலிஸார் வருகை தந்து பணிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக தற்காலிக பாதுகாவலர் கூறியுள்ளாரர்.

அதன் பின்னர் அவர்கள் பொருத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் அங்கிருந்து அகற்றியதாக குறித்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் கோவிலை அமைப்பதை தடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெறுவதாகவும் அதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்களை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.