சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்க ஜனாதிபதி அவதானம்

prisoner

சிறைச்சாலை அமைப்பில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிறு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

சிறைச்சாலை திணைக்களம் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தற்போது 26,000 நபர்கள் தீவு முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் படி, 15,000 கைதிகள் மாத்திரமே சிறையில் உள்ளனர்.

சிறைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சிறு குற்றங்களில் ஈடுபடும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குழு இன்னும் உறுதியான முடிவினை எடுக்கவில்லை.