15 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

5e70e0c39941e.image

சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை கடந்துள்ளது. இதற்கமைய, இதுவரை சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்து 84 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த வைரஸ் தொற்றுகாரணமாக 6 இலட்சத்து 18 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொவிட் 19 தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 66 ஆயிரத்து 903 பேர் புதிய தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி, அங்கு இதுவரையில் 4 இலட்சத்து 28 ஆயிரத்து 332 பேர் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை அங்கு, ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 944 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்தியாவில் கொவிட் 19 தொற்று இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் இதுவரை 11 இலட்சத்து 94 ஆயிரத்து 85 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் அங்கு இதுவரையில் 28 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.