பொலிஸாரால் புதிய மின்னஞ்சல் சேவை அறிமுகம்!

asd1 4
asd1 4

நாட்டில் போதைப்பொருள் பாவனை, பணம் பறித்தல் மற்றும் பாதாள உலக குழுக்களின் குற்றச்செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் புதிய மின்னஞ்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாரிய குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவும் வகையில் இந்த செயற்பாடு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இதன்படி 1997@police.lk, 1917@police.lk ஆகிய மின்னஞ்சல் ஊடாக பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்.

இதேவேளை 1997, 1917 ஆகிய தொலைபேசி இலக்கங்களும் 0112440440 என்ற தொலைநகல் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.