யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அபாயம்

6ca7
6ca7

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலையயை அடுத்து டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று இந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரித்தார்.

விஷேடமாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 55,723 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 17 ஆம் திகதி வரையில் 3,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாகணத்தில் மாத்திரம் 26,666 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.