ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 1

கலிகமுவ பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அநுர மஞ்சநாயக்க காவல்துறையின் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) பிற்பகல் கலிகமுவ – பொயகொட பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 14 ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் நிலத்தை அகழும் அதிநவீன இயந்திரங்கள் இரண்டும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.